நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா பின்னணியில் பாலிவுட் நடிகை

புதுடெல்லி:

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமாவிற்கு பாலிவுட் நடிகை புகார் காரணமா? எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுபோல், மத்திய இணை அமைச்சரின் விலகல் பின்னணியின் மர்மங்கள் தொடர்கின்றன.

கடந்த வாரம் மத்திய செய்தி ஒபிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் திடீரெனப் பதவி விலகினார். வரும் ஏப்ரல் 2030 வரை எம்பி பதவிக்காலம் இருந்தும் அதையும் அவர் ராஜினாமா செய்தார்.

இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் அளித்த புகார் காரணமாகவே முருகன் ராஜினமா செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ஒருவருடன் இருந்த தொடர்பு காரணமாக வெளியான சில செய்திகளே முருகனின் வெளியேற்றத்திற்குக் காரணம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன..

அந்த நடிகை இது குறித்து பிரதமர் மோடி அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் புகார் அளித்தாராம். அந்த அதிகாரி உடனடியாக இந்த விவகாரத்தை ஆளும் கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் கொண்டு சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, மத்திய இணை அமைச்சர் பதவி, மாநிலங்களவை எம்பி பதவி ஆகிய இரண்டில் இருந்தும் விலக முருகனுக்கு உத்தரவிடப்பட்டதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset