செய்திகள் இந்தியா
டெல்லி விமான நிலையத்தில் 3.2 கிலோ தங்கக்கட்டிகள்: துபாயிலிருந்து கடத்தி வந்தவர் சிக்கினார்
புது தில்லி:
புது தில்லி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 4.00 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபையிலிருந்து தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்தியப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் கதவைத் தானாக மூடுவதற்காகத் தரையில் பொருத்தப்படும் 'ஃப்ளோர் ஸ்பிரிங்' (floor spring) எனும் கருவிக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து, சுமார் ரூ. 4.03 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ எடையிலான தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து, சுங்கச் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக இந்தக் கருவியை அவர் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2026, 10:31 am
சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம்
October 18, 2026, 10:20 am
இந்தியத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமாருக்கு எதிராக லண்டனில் மாணவர்கள் போராட்டம்
October 14, 2026, 11:39 am
பீகார் மாநிலத்தில் சோகம்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் உயிரிழப்பு
October 13, 2026, 10:34 pm
டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டம்: மாணவர் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக தாக்கிய போலிஸ்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
