நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமாருக்கு எதிராக லண்டனில் மாணவர்கள் போராட்டம்

லண்டன்: 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடுகள் தொடர்பாக,  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி காங்கிரஸ், கரப்பான்பூச்சி ஜனதா உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தை இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்திருந்ததுடன், சேவ் டெமாக்ரசி, எஸ்எப்ஐ, சவுத் ஏசியா சாலிடிட்டி குரூப் உள்ளிட்ட பல்வேறு புலம்பெயர் அமைப்புகள் இதற்கு ஆதரவளித்தன. 

லண்டன் நாடாளுமன்ற தெருவில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே கூடிய மாணவர்கள் வாக்கு திருட்டை நிறுத்து என்ற கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவிற்கு ஆதரவாக வாக்காளர் திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமாருக்கு எதிராக லண்டனில் மாணவர்கள் போராட்டம் நடத்துவதை பிரிட்டிஷார் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி அளித்ததோடு லண்டன் போலிஸார் பாதுகாப்பும் அளித்தனர்.

- ஆர்யன்

​​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset