நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பயணியின் செல்போனை பறிக்க முயன்றபோது திருடனின் கைகளை பிடித்துக் கொண்டதால் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய நபர்

பாட்னா:

பிஹார் மாநிலத்​தில் ஓடும் ரயி​லில் செல்​போன் திருடமுயன்ற நபரின் கைகளை ஜன்​னல் வழி​யாக பயணி​கள் பிடித்துக் கொண்​ட​தால், ரயிலுக்கு வெளியே மரண பீதி​யுடன் தொங்கிய நிலை​யில் சென்ற காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது.

பிஹார் மாநிலம், பாகல்​பூர் மாவட்​டத்​தில் உள்ள சிவ்நாராயண்பூர் ரயில் நிலை​யத்​தில் இருந்து பயணி​கள் ரயில் ஒன்று புறப்​பட்​டது. அப்​போது, ஜன்​னல் வழி​யாகப் பயணி ஒரு​வரின் செல்​போனை மர்ம நபர் ஒரு​வர் பறிக்க முயன்றார். இதையடுத்​து, ரயில் பெட்​டிக்​குள் இருந்த பயணி​கள் விரைந்து செயல்​பட்​டு, மர்ம நபர் தப்​பிச் செல்​வதற்கு முன்​பாக அவரது கைகளைப் பிடித்​துக் கொண்​டனர். ரயில் நகரத் தொடங்​கிய​போதும் அவரை விடா​மல் பிடித்​திருந்​த​தால், அந்த நபர் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்​கிய நிலை​யில் இருந்​தார்.

ரயில் வேகம் எடுக்​கத் தொடங்​கியதும், அந்த நபர் தன்னை விடு​வித்​துக் கொள்ள மரண பீதி​யுடன் போராடி​னார். 

சிறிது தூரம் இழுத்​துச் செல்​லப்​பட்ட அந்த நபர், பின்னர் நடைமேடை​யில் விழுந்​தார். அவரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த காணொலி இணை​யத்​தில் வைரலாகி வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset