நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம்

மும்மை:

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் சென்ற கார் மீது மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் தாக்குதலில், டைகர் ஷெராஃப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. 

இதுகுறித்து வெளியாகியுள்ள ஆடியோவில், டைகர் ஷெராஃப், நடிகர் சல்மான்கானுடன் இணைந்து பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் என்று ஏற்கெனவே எச்சரித்தோம்.

அதைப் பொருட்படுத்தாததால் தாக்குதல் நடத்தியதாகவும் அந்தக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

மேலும், சல்மான் கானுடன் பணியாற்றும் திரையுலகினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே, இந்த கும்பல் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது.
இந்தச் சூழலில் தான், இந்தச் சம்பவம் தொடர்பாக மும்பை போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset