நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வங்காளதேச நபரின் குடியுரிமை சட்டப்பூர்வமானது: தேசியப் பதிவுத் துறை

புத்ராஜெயா:

சமூக ஊடகங்களில் வைரலான வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு நபரின் குடியுரிமை சட்டப்பூர்வமாகப் பெறப்பட்டது என தேசியப் பதிவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அதே சமயம், பாகிஸ்தான் நாட்டவர் என்று கூறப்படும் ஒரு பெண்ணின் வழக்கு இன்னும் மேலதிக விசாரணையில் உள்ளது.

ஒரு அறிக்கையில், சம்பந்தப்பட்ட இரு நபர்களின் அடையாள அட்டையின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் குடியுரிமை நிலை குறித்து கேள்வி எழுப்பி, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதை அறிந்திருப்பதாக தேசியப் பதிவுத் துறை கூறியுள்ளது.

அவரது கூற்றுப்படி, முதல் வழக்கில், தேசியப் பதிவுத் துறையின் அதிகாரப்பூர்வ பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், வங்காளதேசத்தைச் சேர்ந்த அந்த நபர் இயல்புமயமாக்கல் மூலம் மலேசியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

இது 2025ஆம் ஆண்டின் கூட்டாட்சி அரசியலமைப்பின் 19(1) பிரிவின்படி, ஒழுங்கான முறையில் மற்றும் சட்டத்தின் விதிகள்,  நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க நடைபெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர், மலேசியக் குடிமகளான ஒரு பெண்ணின் கணவரும், 2009 முதல் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து பெற்றவரும் ஆவார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டவர் என்று கூறப்படும் ஒரு பெண் சம்பந்தப்பட்ட இரண்டாவது வழக்கில், பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து தேசிய ஊரகப் பதிவுத் துறை மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.

அதிகாரப்பூர்வ பதிவுகள், தொடர்புடைய உண்மைகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக முன்னேற்றங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று அவர் இன்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset