செய்திகள் மலேசியா
பெர்லிஸ் படகு விபத்து: மலேசிய கடலோரக் காவல் படை விசாரணை
கோலாலம்பூர்:
பெர்லிஸ் கடற்பகுதியில் ரோந்துப் படகு விபத்துக்குள்ளாகி அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வழக்கமான செயல்பாட்டு விதிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை ஆராய APMM விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மலேசிய கடலோரக் காவல் படையின் துணைத் தலைமை இயக்குநர் முஹம்மத் ஜவாவீ அப்துல்லா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அமைப்பின் ஒவ்வொரு நடவடிக்கையின்போதும் குறிப்பிட்ட SOP வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன.
அதிகாரிகளும் அவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்குமாறு எப்போதும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது, எதிர்காலத்தில் தவற்றைச் சரிசெய்யும் பொருட்டு உள்நாட்டு விசாரணை நடத்தப்படுவது வழக்கம்" என்று கூறினார்.
நேற்று இரவு கோலா நெராங்கில் நடைபெற்ற 41 வயதான உளவுப்பிரிவு அதிகாரி முஹம்மத் ரோஷைமி முஹம்மத் ரிட்சுவானின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
SOP மட்டுமன்றி, அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் நவீன உபகரணங்கள் ஆகியவற்றிலும் செய்ய வேண்டிய மாற்றங்களை இந்த விசாரணை மூலம் அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை விரைவாகத் தொடங்கப்பட்டு சில வாரங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 12:06 pm
Waze-க்கு மாற்றாக TuJu-வை அமல்படுத்தும் விவகாரம்; திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்: கணபதிராவ்
October 28, 2026, 12:05 pm
கெடா, பெர்லிஸ் வெள்ள நிலைமை சீரடையவில்லை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
October 28, 2026, 12:03 pm
வங்காளதேச நபரின் குடியுரிமை சட்டப்பூர்வமானது: தேசியப் பதிவுத் துறை
October 28, 2026, 10:36 am
பிடிபிடிஎன் கடன் வசூலிப்பாளர்கள் ஆலோங் போல் நடந்துகொள்ளக் கூடாது: ஸம்ரி
October 28, 2026, 9:53 am
