நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிடிபிடிஎன் கடன் வசூலிப்பாளர்கள் ஆலோங் போல் நடந்துகொள்ளக் கூடாது: ஸம்ரி

கோலாலம்பூர்:

தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தால் (பிடிபிடிஎன்) நியமிக்கப்பட்ட கடன் வசூலுப்பு முகமைகள், கடன் வாங்கியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர, ஆலோங் நடந்துகொள்ளக் கூடாது.

உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதிர் இதனை நினைவூட்டியுள்ளார்.

உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக, இதுபோன்ற செயல்கள் குறித்து தன்னிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்தக் கடன் வசூலிப்பவர்களையோ அல்லது பேச்சுவார்த்தை முகமைகளையோ நாங்கள் நியமிக்கும்போது, ​​அவர்கள் செய்யும் காரியங்கள் தன்னிச்சையாகச் செய்யப்படுவதில்லை என்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம்.

அதனால்தான், இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள் வந்தால், நாங்கள் விரைவான நடவடிக்கை எடுப்போம்.

நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை நிறைவு செய்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset