நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நமது சேவைகளும் பண்பும் தான் பதவி இல்லையென்றாலும் மரியாதையை கொடுக்கும்; பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா கோலாலம்பூரின் அடையாளம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா கோலாலம்பூரின் அடையாள சின்னமாகும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ நஜிப்பிடம் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா திட்டத்தை முன்வைத்தேன்.

நான் பிரதமரானால் இத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வருகிறேன் என அவர் வாக்குறுதி வழங்கினார்.

அதன் பின் பிரதமரான அவர் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி நிதியையும் ஒதுக்கினார்.

குறிப்பாக இத்திட்டத்தின் மேற்பார்வையிடும் முழு பொறுப்பையும் எனக்கு வழங்கினார்.

அதன் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா உருவான கதை அனைவருக்கும் தெரியும்.

அதே வேளையில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா உருவானதற்கு முன்பும் பின்பும் இங்குள்ள வர்த்தகர்களின் குரலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

காரணம் அரசியல்வாதிகளை அடுத்து அவர்கள் தான் அதிகம் மக்களை சந்திக்கிறார்கள்.

இவ்விவகாரம் இன்றைய பதவியில் உள்ளவர்களுக்கு தெரிவது இல்லை. இதனால் தான் பல பிரச்சினைகள் எழுகிறது.

அப்போது எனது சேவையும் பண்பும் தான் இன்று பதவியில் இல்லாத போதிலும் எனக்கு உரிய மரியாதை கிடைக்கிறது.
ஆக இதை கேள்விக்குறியாக்காமல் வணிகர்கள் மக்களின் குரல்களுக்கு கேளுங்கள்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவின் 16ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset