செய்திகள் மலேசியா
தண்டனைச் சட்டத்தின் 331ஆவது பிரிவின் கீழ் நூரிஸ்வானின் மரணம் குறித்து போலிஸ் விசாரணை: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி செராஸ் போலிஸ் நிலைய தடுப்புக் காவலில் உயிரிழந்த நூரிஸ்வான் சூல்கிப்லியின் மரண வழக்கை, தண்டனைச் சட்டத்தின் 331ஆவது பிரிவின் கீழ் போலிஸ் மறுவகைப்படுத்தியுள்ளது.
இறந்தவரின் உடலில் காணப்பட்ட காயங்கள், மழுங்கிய ஆயுதங்களால் ஏற்பட்டவை.
அவர் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் அல்ல என்றும் சான்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை தற்போது குற்றப் புலனாய்வுத் துறையின் வழக்குத் தொடர்வு, டி5 பிரிவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நூரிஸ்வானின் உடற்கூறு ஆய்வை நடத்திய சான்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ ஆலோசகரின் வாக்குமூலப் பதிவின் முடிவுகளுக்குப் பிறகு இந்த வழக்கு வகைப்படுத்தப்பட்டது.
இறந்தவரின் உடலின் பல பகுதிகளில் வெளிப்புறக் காயங்கள் இருந்ததையும், அந்தக் காயங்களின் தன்மை மழுங்கிய தாக்குதல்களுடன் ஒத்துப்போவதையும், அவை சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் அல்ல என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 12:06 pm
Waze-க்கு மாற்றாக TuJu-வை அமல்படுத்தும் விவகாரம்; திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்: கணபதிராவ்
October 28, 2026, 12:05 pm
கெடா, பெர்லிஸ் வெள்ள நிலைமை சீரடையவில்லை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
October 28, 2026, 12:03 pm
வங்காளதேச நபரின் குடியுரிமை சட்டப்பூர்வமானது: தேசியப் பதிவுத் துறை
October 28, 2026, 11:33 am
பெர்லிஸ் படகு விபத்து: மலேசிய கடலோரக் காவல் படை விசாரணை
October 28, 2026, 10:36 am
