நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான நல்லுறவும் தொடர வேண்டும்: ஊடகங்களுடனான தீபாவளி விருந்துபசரிப்பில் அமைச்சர் அந்தோனி லோக்

பெட்டாலிங் ஜெயா:

ஊடக நண்பர்களுக்காக DAP ஆண்டுதோறும் நடத்தும் சந்திப்பில், உங்கள் அனைவரையும் வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போக்குவரத்து அமைச்சரும் ஜ செ க வின் பொதுச் செயலாளருமான அந்தோனி லோக் கூறினார். 

அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான நல்லுறவும் தொழில்முறை ஒத்துழைப்பும் முக்கியம் என அவர்  குறிப்பிட்டார்.

ஊடகச் சுதந்திரம் அதிகரித்துள்ளதாகவும், சமூக ஊடகங்கள் காரணமாக பொதுமக்கள் அரசின் கொள்கைகள், முடிவுகளை உடனடியாகக் கேள்வி கேட்டு விமர்சிக்கிறார்கள் என்றும் இது ஆரோக்கியமான ஒன்று என்று அவர் கூறினார். 

ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு அவசியமானது; அரசியல் தலைவர்கள் இந்த திறந்த, விமர்சனமான சூழலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 

ஊடகத் துறையில் எழும் பிரச்சினைகளை கையாள ஊடக மன்றம் அமைந்திருப்பது முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டார்.

அரசின் கொள்கைகள் மற்றும் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகளைச் சமாளிக்கவும், பொருளாதாரத்தை வளர்க்கவும் அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்றார். 

தமிழ் ஊடகங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் என்று கூறி தனது உரையை முடித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset