நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி, சமுதாய நலனுக்கான திட்டங்களை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

தீபாவளி, சமுதாய நலனுக்கான திட்டங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மித்ராவுக்கான நிதியை 150 மில்லியன் ரிங்கிட்டாக பிரதமர் உயர்த்தியுள்ளார்.

இந்நிதியை கொண்டு சமுதாயத்தின் உருமாற்றம், மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மித்ரா மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது.

பல முக்கிய திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்கள் அனைத்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

அதன் பிரதமரே இத்திட்டங்கள் குறித்து நேரடியாக அறிவிப்பார். ஆக அது குறித்து பேச நான் விரும்பவில்லை.

மேலும் இத்திட்டங்கள் தீபாவளிக்கானதா அல்லது சமுதாயத்திற்கானதா என்பதை பிரதமரின் அறிவிப்புக்காக அனைவரும் காத்திருங்கள் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset