நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக நல்லிணக்கச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி: துணை அமைச்சர் யுவனேஸ்வரன்

கோலாலம்பூர்:

ஆண்டு முழுவதும் ஒற்றுமை அமைச்சகத்தின் தகவல்களையும் சமூக நல்லிணக்கச் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஒற்றுமை மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் யுவனேஸ்வரன் கூறினார். 

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும், ஒற்றுமை அரசின், “மடானி” அரசின் நோக்கங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

சுமார் 40 ஆண்டுகள் செய்தியாளராகப் பணியாற்றி, குறிப்பாக இந்தியச் சமூகத்தை அணுகுவது குறித்து தமக்கு வழிகாட்டிய மறைந்த மூத்த செய்தியாளருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்; 

அவரைச் சந்தித்து அஞ்சலியும் செலுத்தியதாக துணை அமைச்சர் கூறினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி, தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

வருகின்ற 14 ஆம் தேதி பிரதமர் தலைமையில் பிரம்மாண்டமான முறையில் பிரிக்ஃபீல்ட்ஸில் நடைபெற உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset