நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம்; நவம்பர் 6இல் நடைபெறுகிறது: பாப்பாராயுடு

ஷாஆலம்:

சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு வரும் நவம்பர் 6ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை கிள்ளான், டத்தாரான் கிள்ளான் @ பாடாங் செட்டியில் நடைபெறவுள்ளது.

இந்த தீபாவளி உபசரிப்பில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி சிறப்பு பிரமுகராகக் கலந்து கொள்கிறார்.

விருந்துபசரிப்புடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முறையாக செயல்படும் ஆலயங்களுக்கு அங்கீகாரம், மாணவர்கள், சிறார்களுக்கு அன்பளிப்பு ஆகியவை வழங்கப்படும்.

'ஒற்றுமையின் ஒளி; வளமான சிலாங்கூர்' எனும் கருப்பொருளுடன் இவ்வருட தீபாவளி கொண்டாடப்படும் என்று அவர்  சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset