நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊடகங்களுக்கு புதுமை நிதியின் இரண்டாம் கட்டமாக RM30 மில்லியன் விரைவில் திறக்கப்படும்: துணை அமைச்சர் தியோ நி சிங்

பெட்டாலிங் ஜெயா:

ஊடகங்களுக்கான புதுமை நிதியின் இரண்டாம் கட்டமாக RM30 மில்லியன் விரைவில் திறக்கப்படும் என்று தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் Teo Nie Ching கூறினார்.

திட்டமிட்டபடி, தொடர்பாடல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி வரும் வெள்ளிக்கிழமை இந்த நிதியைத் தொடங்கி வைப்பார் என்றும், விண்ணப்பங்கள் அடுத்த திங்கட்கிழமை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

தேதிகள் மாறக்கூடும் என்றாலும், நிதியும் அதன் விதிமுறைகளும் தயாராக உள்ளன என்றார் அவர்.

ஊடக நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறும், தகுதி அல்லது விண்ணப்ப நடைமுறை குறித்து கேள்விகள் இருந்தால் அவரது அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 

குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கும் இந்த நிதி சென்றடைய வேண்டும் என தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

கூகுள், மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊடகங்களின் வருவாயைப் பாதிப்பதால், நெருக்கடியான சூழலில் ஊடகத் துறைக்கு அரசு ஆதரவளிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset