செய்திகள் மலேசியா
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை வணிகர்கள் யாருமே திருப்தியாக இல்லை; கடைகளை வெளியே அமைக்க வணிகர்களுக்கு அனுமதி தர வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
பிரிக்பீல்ட்ஸ்:
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை வணிகர்கள் யாருமே திருப்தியாக இல்லை.
ஆக கடைகளை வெளியே அமைக்க அவர்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
பிரிக்பீல்ட்ஸில் தீபாவளி சந்தை ஏற்பாடு செய்திருக்கும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோவிற்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இருந்த போதிலும் இங்கு கடைகள் அமைந்ததால் இங்குள்ள வணிகர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக வருமானம் குறைவு, சூடான சூழ்நிலை, வாடிக்கையாளர்கள் இங்கு வராதது என அவர்களின் இன்னல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
வர்த்தகர்களுக்கு பாதிப்பு என்றால் பல மில்லியன் ரிங்கிட் செலவு செய்தாலும் அதனால் எந்த பயனும் இருக்காது.
ஆக வணிகர்களின் குறைகளை கேட்டறிந்து அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் கடைசி ஒரு வாரத்திற்காவது கடைகளை வெளியே அமைக்க இந்த வணிகர்களுக்கு அனுமதி தர வேண்டும்.
இது குறித்து கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோவிற்கு கடிதம் அனுப்புவேன்.
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை வணிகர்களை நேரடியாக சந்தித்த டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 7:08 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி, மசீச பேச்சுவார்த்தையால் வாபஸ் பிரச்சினை இல்லை: ஜாஹித்
October 27, 2026, 7:04 pm
பிரதமருக்கு எதிரான அவதூறு வழக்கின் போக்கை துன் மகாதீரின் உடல்நிலை தீர்மானிக்கும்
October 27, 2026, 6:52 pm
சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி கொண்டாட்டம்; நவம்பர் 6இல் நடைபெறுகிறது: பாப்பாராயுடு
October 27, 2026, 3:38 pm
சமூக நல்லிணக்கச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி: துணை அமைச்சர் யுவனேஸ்வரன்
October 27, 2026, 12:38 pm
போலி மருத்துவமனை அழைப்புகள், கள்ள முதலீடுகள், கடன் மோசடிகள்: பேராக்கில் 36 பேரை காவல்துறை கைது
October 27, 2026, 12:38 pm
