நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணி, மசீச பேச்சுவார்த்தையால் வாபஸ் பிரச்சினை இல்லை: ஜாஹித்

மலாக்கா:

கடந்த அக்டோபர் 24 அன்று மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக விழாவின் போது எழுந்த தேசிய முன்னணி, மசீச இடையேயான தொகுதி பங்கீடு சர்ச்சை, கூட்டணியில் இருந்து கட்சி விலகும் பிரச்சினை இல்லாமல் சாதகமான முன்னேற்றங்களைக் காட்டியுள்ளது.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங், பொதுச்செயலாளர், டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர், மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துர் ரவுஃப் யூசோ ஆகியோருடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டது.

மசீச விலகல் பிரச்சினை  எதுவும் இல்லை. அது எழவே இல்லை.  விவாதிக்க வேண்டாம்.

ஆனால் அதை அறிவிக்க நான் அதிகாரம் வழங்கியுள்ள மலாக்காவின் முதலமைச்சர் அறிவிக்கும் வரை என்னால் அதை அறிவிக்க முடியாது  என்று அவர் கூறினார்.

இன்று இங்குள்ள மலாக்கா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜெலிதா எனும் கற்றல், அனைவரையும் உள்ளடக்கிய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் 12 மணி நேர தீவிர முடுக்கப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு அஹ்மத் ஜாஹித் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset