செய்திகள் மலேசியா
தர்ம மடானி, ஹர்மோனி மடானி திட்டத்தின் கீழ் 164 வழிபாட்டுத் தலங்களுக்கு 3.28 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
நாட்டில் உள்ள இந்து, சீக்கிய, கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களுக்கு சமூக மேம்பாட்டிற்காக மொத்தம் 3.28 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியை வழங்கப்பட்டது.
மித்ராவின் கீழ் தர்ம மடானி, ஹர்மோனி மடானி திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் உள்ள 164 வழிபாட்டுத் தலங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டது.
ஹர்மோனி மடானி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 69 வழிபாட்டுத் தலங்களுக்கு 1.38 மில்லியன் ரிங்கிட் நிதியை அங்கீகரிக்கபட்டுள்ளது.
இதில் 57 சீக்கிய ஆலயங்களும் 12 தேவாலயங்களும் அடங்கும்.
ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்திற்கும் சமய, ஆன்மிக, கலாசார, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 20,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
இதற்கிடையில், தர்மா மடானி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 95 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு 1.9 மில்லியன் நிதியுதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தர்மா மடானி திட்டத்தின் கீழ் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மொத்த நிதி 15.42 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 771 இந்து வழிபாட்டுத் தலங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றன.
இந்த இரு திட்டங்களும் வழிபாட்டுத் தலங்களை வலுப்படுத்துவதிலும், இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பை விரிவுபடுத்துவதிலும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
மேலும், இந்த நிதியுதவி வழிபாட்டுத் தலங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன், கல்வி, ஆன்மிகம், நற்பண்பு வளர்ச்சி, கலாசாரம், இளைஞர்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவும்.
தகுதியுடைய வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி, அவற்றை சமய மற்றும் சமூக மேம்பாட்டு மையங்களாக வலுப்படுத்த மடானி அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 3:38 pm
சமூக நல்லிணக்கச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி: துணை அமைச்சர் யுவனேஸ்வரன்
October 27, 2026, 12:38 pm
போலி மருத்துவமனை அழைப்புகள், கள்ள முதலீடுகள், கடன் மோசடிகள்: பேராக்கில் 36 பேரை காவல்துறை கைது
October 27, 2026, 12:38 pm
தீபாவளி, சமுதாய நலனுக்கான திட்டங்களை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
October 27, 2026, 12:19 pm
பள்ளி முன்பு கார் மோதி 11 வயது மாணவர் படுகாயம்
October 27, 2026, 12:18 pm
திரெங்கானு மாநிலம் புறக்கணிப்படவில்லை; 8.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது
October 27, 2026, 11:39 am
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கிய சம்பவம்: பள்ளி தலைமையாசிரியர் போலிஸ் புகார்
October 27, 2026, 11:08 am
நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
October 27, 2026, 10:37 am
