நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி முன்பு கார் மோதி 11 வயது மாணவர் படுகாயம்

கோத்தா கினாபாலு: 

ஓர் ஆரம்பப்பள்ளி முன்பு சாலை கடந்து கொண்டிருந்தபோது கார் மோதி 11 வயது மாணவன் ஒருவர்பலத்த காயங்களுக்கு இலக்கானான். 

இந்த சம்பவம் காலை வேளை கோத்தா கினாபாலுவில் உள்ள டராவ் தேசிய பள்ளியின் முன்பு நிகழ்ந்தது 

காரால் மோதப்பட்ட மாணவன் தலையில் பலத்த காயங்களுக்கு உட்பட்டு லிகாஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான் . தற்போது பாதிக்கப்பட்ட மாணவன் அவசர சிகிச்சை பிரிவின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் 

PROTON WAJA ரக கார் உட்படுத்தி இந்த சாலை விபத்து நிகழ்ந்தது. சாலை விபத்தின் பாதிக்கப்பட்ட மாணவன் சாலை கடந்து கொண்டிருந்ததாக கோத்தா கினாபாலு மாவட்ட போலிஸ் தலைவர் ஷாருடின் மாட் உசைன் தெரிவித்தார். 

இந்த சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்‌ஷன் 43(1)இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது இந்த சம்பவம் தொடர்பான CCTV பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன .

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset