செய்திகள் மலேசியா
தங்கள் குடிமக்கள் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு மியன்மாரிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது: ஹசான்
கோலாலம்பூர்:
சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான குடிமக்கள் மியன்மார் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் குறித்து மியன்மாரிடம் மலேசியா விளக்கம் கோரும்.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் இதனை கூறினார்.
இன்னும் 300 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தால், நாங்கள் மியன்மார் அரசாங்கத்திடம் விளக்கம் கோருவோம், என்று அவர் இன்று மக்களவையில் தனது அமைச்சகத்திற்கான 2027 வரவுசெலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைக்கும்போது கூறினார்.
இந்தக் கூறப்படும் தடுப்புக்காவல்கள் குறித்த செய்திகளுக்கு அரசாங்கத்தின் பதிலை அறிய விரும்பிய சிக் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் தர்மிசி சுலைமான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ரக்கைன் இன மக்கள், யாங்கோனில் இன்னும் இராணுவக் காவலில் இருப்பதாக, மியன்மாரின் 'டெமாக்ரடிக் வாய்ஸ் ஆஃப் பர்மா' என்ற செய்தி இணையதளம் அக்டோபர் 22 அன்று செய்தி வெளியிட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 3:38 pm
சமூக நல்லிணக்கச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி: துணை அமைச்சர் யுவனேஸ்வரன்
October 27, 2026, 12:38 pm
போலி மருத்துவமனை அழைப்புகள், கள்ள முதலீடுகள், கடன் மோசடிகள்: பேராக்கில் 36 பேரை காவல்துறை கைது
October 27, 2026, 12:38 pm
தீபாவளி, சமுதாய நலனுக்கான திட்டங்களை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
October 27, 2026, 12:19 pm
பள்ளி முன்பு கார் மோதி 11 வயது மாணவர் படுகாயம்
October 27, 2026, 12:18 pm
திரெங்கானு மாநிலம் புறக்கணிப்படவில்லை; 8.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது
October 27, 2026, 11:39 am
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கிய சம்பவம்: பள்ளி தலைமையாசிரியர் போலிஸ் புகார்
October 27, 2026, 11:08 am
நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
October 27, 2026, 10:37 am
