நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானு மாநிலம் புறக்கணிப்படவில்லை; 8.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது 

கோலாலம்பூர்: 

நாட்டில் எதிர்கட்சி மாநிலங்களை கூட்டரசு அரசாங்கம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. குறிப்பாக திரெங்கானு மாநிலத்தைப் புறக்கணிக்கவில்லை. 

மாறாக, 8.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

கடந்த 2022ஆம் ஆண்டில் திரெங்கானு மாநிலத்திற்கு 6 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்ட வேளையில் தற்போது 2027ஆம் ஆண்டு 8.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது 

திரெங்கானு மாநில மக்களின் நல்வாழ்வுக்காகவும் மாநிலத்தின் மேம்பாட்டிற்காகவும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் வாயிலாக இல்லாமல் அமைச்சுக்கள், இலாகாவின் வாயிலாக நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் சொன்னார். 

முன்னதாக, பிரதமரின் PMQT கேள்வி - பதில் அங்கத்தில் பிரதமர் அன்வார் இவ்வாறு நாடாளுமன்றத்தில் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset