செய்திகள் மலேசியா
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கிய சம்பவம்: பள்ளி தலைமையாசிரியர் போலிஸ் புகார்
ஈப்போ:
பாலியல் துன்புறுத்தல் காரணமாக பாகான் டத்தோ மாவட்டத்தில் உள்ள பள்ளி முதல்வர் மீது பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தாக்கியதும் அது தொடர்பான வீடியோ வைரலானதையும் சுட்டிக்காட்டி அந்த பள்ளி தலைமையாசிரியர் போலிஸ் புகார் மேற்கொண்டுள்ளார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை 56 வயதான ஆடவர் ஒருவர் இந்த போலிஸ் புகாரைச் செய்ததாக பேராக் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் அல்வி சைனால் அபிடின் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அவரை தாக்கியதால் அவர்கள் மீது இந்த போலிஸ் புகார் அவர் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
தொலைதொடர்பு பயன்பாட்டை தவறாக பயன்படுத்தியதாக வகைப்படுத்தப்படும் 1998ஆம் ஆண்டு தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் அசௌகரிய வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் இதனால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் முதற்கட்டமாக தெரிய வந்தது
முன்னதாக, தலைமை ஆசிரியர் மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பேராக் மாநிலக் கல்வித் துறைக்கு கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் உத்தரவிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 3:38 pm
சமூக நல்லிணக்கச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி: துணை அமைச்சர் யுவனேஸ்வரன்
October 27, 2026, 12:38 pm
போலி மருத்துவமனை அழைப்புகள், கள்ள முதலீடுகள், கடன் மோசடிகள்: பேராக்கில் 36 பேரை காவல்துறை கைது
October 27, 2026, 12:38 pm
தீபாவளி, சமுதாய நலனுக்கான திட்டங்களை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
October 27, 2026, 12:19 pm
பள்ளி முன்பு கார் மோதி 11 வயது மாணவர் படுகாயம்
October 27, 2026, 12:18 pm
திரெங்கானு மாநிலம் புறக்கணிப்படவில்லை; 8.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது
October 27, 2026, 11:08 am
நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
October 27, 2026, 10:37 am
