செய்திகள் மலேசியா
நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
கோலாலம்பூர்:
நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று செவ்வாய்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கேட்டுக்கொண்டார்
இந்த பருவமழையானது 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும், இதன் காரணமாக தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பிற்கு இது பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026 நவம்பர் முதல் 2027 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் மூன்று முதல் ஐந்து முறை வரை தொடர் கனமழை பொழியும் நிகழ்வுகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்காலக்கட்டத்தில் வீசக்கூடும் பலத்த காற்றின் காரணமாக தெற்கு சீனக் கடலில் பலத்த அலைகளும் கடல் நீர்மட்டம் உயர்வும் ஏற்படக்கூடும் என்றும் அகமட் ஜாஹித் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் உடனுக்குடன் வானிலை அறிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும், வெள்ள அபாயம் நிறைந்த பகுதிகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதே வேளையில், எந்தச் சூழலிலும் வெள்ள நீரைக் கடக்க முயல வேண்டாம் என்றும், அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து, தேவைப்பட்டால் உடனடியாக நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 3:38 pm
சமூக நல்லிணக்கச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி: துணை அமைச்சர் யுவனேஸ்வரன்
October 27, 2026, 12:38 pm
போலி மருத்துவமனை அழைப்புகள், கள்ள முதலீடுகள், கடன் மோசடிகள்: பேராக்கில் 36 பேரை காவல்துறை கைது
October 27, 2026, 12:38 pm
தீபாவளி, சமுதாய நலனுக்கான திட்டங்களை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
October 27, 2026, 12:19 pm
பள்ளி முன்பு கார் மோதி 11 வயது மாணவர் படுகாயம்
October 27, 2026, 12:18 pm
திரெங்கானு மாநிலம் புறக்கணிப்படவில்லை; 8.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது
October 27, 2026, 11:39 am
பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கிய சம்பவம்: பள்ளி தலைமையாசிரியர் போலிஸ் புகார்
October 27, 2026, 10:37 am
