செய்திகள் இந்தியா
டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டம்: மாணவர் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக தாக்கிய போலிஸ்
டெல்லி:
இந்தியத் தலைநகர் புது டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடையை மீறி, மாணவர் அமைப்பினரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலிசார் அவர்களைக் கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகவும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை கோரியும் இந்தப் போராட்டம் வட இந்தியா முழுவதும் பரவி வருகிறது.
புது டெல்லியின் முக்கியப் போராட்டக் களமாக விளங்கும் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாகப் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்துள்ளன.
இந்நிலையில், அப்பகுதியில் போராட்டம் நடத்துவதற்குத் திடீரென்று தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலிசார் கூறி தடியடி நடத்தினர்.
இதனை எதிர்த்து, மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், “டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்குத் தனியார் நிர்வாகத்திடம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. மற்ற போராட்ட இடங்களும் நகரத்திலிருந்து 20 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. அத்தகைய இடங்களில் போராட்டம் நடத்தினால், மக்களிடம் எங்களது கோரிக்கைகளை எவ்வாறு கொண்டு சேர்க்க முடியும்?
தலைநகரில் போராட்டம் நடத்துவதன் மூலமாகத்தான் எங்களது கோரிக்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாகக் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான எஸ்.ஐ.ஆர். (SIR) தொடர்பாகவும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
