நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வட ஐரோப்பாவில் கடும் புயல்: விமானப் பயணங்கள் பாதிப்பு

ஆம்ஸ்டர்டாம்:

வட ஐரோப்பாவில் கடுமையான புயல் வீசுகிறது.

மின்சார விநியோகமும் தொலைத் தொடர்பும் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுமார் 150,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன

ஸ்காட்லந்தில் மரம் விழுந்து ஆடவர் ஒருவர் மாண்டார்.

அந்நாட்டில் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பதிவாகியுள்ளது.

இங்கிலாந்திலும் ஸ்காட்லந்திலும் புயலால் மரங்களும் மின்சாரக் கம்பிவடங்களும் சாய்ந்தன.

சாலைகளும் ரயில் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நெதர்லந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளையும் புயல் தாக்கியது.

வட ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருப்பிவிடப்பட்டன.

நெதர்லந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்திலும் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset