நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பினாங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு வந்த மற்றொரு சீன நபர் கொக்கைனுடன் கைது செய்யப்பட்டார்

ஹாங்காங்:

பினாங்கிலிருந்து விமானத்தில் ஏறிய ஒரு சீன நபர், தனது பயணப் பையில் 2.2 கிலோ கொக்கைனைக் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் இன்று ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பினாங்கிலிருந்து ஹாங்காங்கிற்கு போதைப்பொருள் கடத்தியதற்காக ஒரு சீன நாட்டவர் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

சந்தை விலையில் சுமார் 700,000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட சுங்க சோதனையின் போது, ​​39 வயதான அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ஹாங்காங் சுங்கத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவரது பயணப் பெட்டிகளை சோதனையிட்டதில், சந்தேகத்திற்குரிய கொக்கைன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மீது பின்னர் அபாயகரமான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு மேற்கு கவ்லூன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset