செய்திகள் மலேசியா
ஜொகூரில் பள்ளிகள் நாளை முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத்தில் பள்ளிகள் நாளை முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்.
ஜொகூர் மாநில கல்வி, தகவல் செயற்குழு உறுப்பினர் நகிப் முகமது கசாலி இதனை தெரிவித்தார்.
ஜொகூர் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நல்வாழ்வை எப்போதும் வலியுறுத்தும் ஜொகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எஸ்பிஎம், கல்வி அமர்வு இறுதித் தேர்வுகளுக்குத் தயாராவதற்குப் பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இந்தக் காலகட்டம் அவகாசம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய காற்றின் தரத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு உட்பட்டு, ஜொகூர் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் முழுமையாகச் செயல்படும் வகையில், இரண்டாம் கட்டம் புதன்கிழமை தொடங்கும்.
இது தொடர்பாக, தற்போதைய காற்று மாசுபடுத்தும் குறியீட்டு அளவுகளின் அடிப்படையில், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதாரம், பாதுகாப்புக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைச் செயல்படுத்துவதையும், பள்ளி நடவடிக்கைகளைக் கண்காணிப்பதையும் ஜொகூர் மாநிலக் கல்வித் துறை ஒருங்கிணைக்கும் என்று நகிப் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2026, 9:23 pm
தேசியக் கூட்டணியின் அவசரக் கூட்டத்தைக் கூட்டிய தக்கியூடினின் நடவடிக்கை கேள்விக்குறியானது: பெர்சத்து
October 25, 2026, 9:23 pm
நான் ஏமாற்றும் விளையாட்டு வீரர் அல்ல: லீ சோங் வெய்
October 25, 2026, 9:22 pm
வியட்நாமில் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் மலேசியப் பெண் விழுந்தார்
October 25, 2026, 9:20 pm
மித்ராவின் உயர்வு மடானி வணிக மானியத்திற்கு 8,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
October 25, 2026, 9:19 pm
மலாக்கா லிட்டில் இந்தியாவில் தீபாவளி களைகட்டுகிறது: டத்தோஶ்ரீ ரமணன் நேரில் பார்வையிட்டார்
October 25, 2026, 4:17 pm
இனம், மத விவகாரங்களில் அரசியலைக் கலக்காதீர்கள்: சிலாங்கூர் சுல்தான்
October 25, 2026, 4:13 pm
