நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வியட்நாமில் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் மலேசியப் பெண் விழுந்தார்

லாம் டோங்:

இங்குள்ள டா லாட் பகுதியில் மலையேற்றத்தின் போது 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த 40 வயது மலேசியப் பெண் ஒருவர் இன்று மீட்கப்பட்டதாக, உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாம் வியன்–டா லாட் வார்டில் உள்ள ஹான் போ மலைப் பகுதியில், காலை சுமார் 5.45 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜி.எஸ்.டபிள்யூ என அடையாளம் காணப்பட்ட அப்பெண் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ​​கைவிடப்பட்ட சுரங்கப் பகுதியின் ஒரு பகுதியாகவும் சுமார் 70 சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக கூறப்படும் அந்தப் பள்ளத்தில் விழுந்தார்.

அந்தப் பெண் குழியில் சிக்கிக்கொண்டார். அவருடன் இருந்தவர்கள் அவரை வெளியே இழுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

அதன்பின் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அவசர மீட்பு நடவடிக்கையைத் தொடங்க முடிவு செய்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset