நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி உபகாரச் சம்பள திட்டம் தொடரும்; எஸ்பிஎம் கணித தேர்வுக்கு மாணவர்கள் இன்னும் தயாராகவில்லை: சுரேன் கந்தா

பெட்டாலிங்ஜெயா:

எஸ்பிஎம் கணித தேர்வுக்கு மாணவர்கள் இன்னமும் தயாராகவில்லை என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா கூறினார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் எஸ்பிஎம் மாணவர்களுக்கான இறுதி நாள் வகுப்பு இன்று நடைபெற்றது.

சிறப்பு பயிற்சி பட்டறையுடன் மாணவர்களுக்கான இவ்வாண்டு வகுப்பு நிறைவு பெற்றது.

அடுத்து மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வுக்கு தயாராகவுள்ளனர்.

இந்நிலையில் நாங்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் மாணவர்கள் இன்னமும் எஸ்பிஎம் கணித தேர்வுக்கு தயாராகவில்லை என எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

ஆக மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வரும். ஆனால் எஸ்பிஎம் தேர்வு ஒரு முறை தான். ஆக மாணவர்கள் சிறந்த தேர்ச்சிகளை பெற தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று சுரேன் கந்தா கூறினார்.

இதனிடையே பல நல்லுள்ளங்களின் ஆதரவுடன் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் திட்டம் தொடங்கப்பட்டது.

இவ்வாண்டு 150,000 ரிங்கிட் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அடுத்தாண்டும் மாணவர்களுக்கான இந்த உதவித் திட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset