செய்திகள் மலேசியா
இனம், மத விவகாரங்களில் அரசியலைக் கலக்காதீர்கள்: சிலாங்கூர் சுல்தான்
ஷாஆலம்:
தாபோங் ஹாஜி வாரியத்தின் தவறான நிர்வாகம் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதோடு, மத நோக்கங்களுக்காக ஒப்படைக்கப்பட்ட நிதிகள் முழுமையான பொறுப்புக்கூறல், பொறுப்புடன் நிர்வகிக்கப்பட வேண்டும்.
சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா இதனை என்று வலியுறுத்தினார்.
மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் மெக்காவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சேமிக்க உதவுவதற்காகவே தாபோங் ஹாஜி வாரியம் நிறுவப்பட்டது.
எனவே தவறான நிர்வாகமும், கையாடல் குற்றச்சாட்டுகளும் ஏற்படக்கூடாது.
அதேபோல், மத நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் நிர்வாகமும் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பின் அடிப்படையில் அமைய வேண்டும்.
இதே கொள்கை அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மற்றும் அனாதை இல்லங்களுக்கும் பொருந்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், சிலாங்கூர் அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வதிலும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், ஒற்றுமையைப் பேணுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதன் மூலம் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தங்கள் நிலையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
பலனளிக்காத அதீத அரசியல் நடவடிக்கைகளால் தாம் சலிப்படைந்துவிட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2026, 4:13 pm
நான் இன்னும் ஆவணத்தில் கையெழுத்திடவில்லை: மசீசவிடம் ஜாஹித் தெரிவித்தார்.
October 25, 2026, 4:11 pm
பினாங்கு பாயா தெருபோங் நிலச்சரிவு: மருத்துவர் உயிருடன் புதைந்தார்
October 25, 2026, 10:42 am
மலாக்கா தேர்தல்: தஞ்சோங் பிடாராவில் ரவுஃப் தற்காக்கிறார், மெர்லிமாவு தொகுதியில் அக்மால் போட்டியிடுகிறார்
October 25, 2026, 10:10 am
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 21 தொகுதிகளில் போட்டி
October 25, 2026, 8:24 am
மக்கள் ஓசை நாளிதழின் இணை ஆசிரியர் பி.ஆர். இராஜன் காலமானார்
October 24, 2026, 10:47 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: காடேக்கில் நடராஜா போட்டி
October 24, 2026, 7:59 pm
