செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியின் அவசரக் கூட்டத்தைக் கூட்டிய தக்கியூடினின் நடவடிக்கை கேள்விக்குறியானது: பெர்சத்து
கோலாலம்பூர்:
கூட்டணியின் சட்டபூர்வத்தன்மை இன்னும் சர்ச்சையில் இருக்கும்போது, இன்று இரவு நடைபெறவுள்ள அவசரக் கூட்டத்தைக் கூட்டிய தேசியக் கூட்டணி பொதுச்செயலாளர் தக்கியூடின் ஹசானின் நடவடிக்கையை பெர்சத்து கேள்விக்குள்ளாக்குகிறது.
அக்டோபர் 20 அன்று கூட்டணியின் பதிவை ரத்து செய்வதற்கான சங்கங்கள் பதிவகத்தின் முடிவை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
இருந்தாலும் அதன் நிலை இன்னும் வழங்கப்பட்ட தீர்ப்பின்படியே கருதப்படுகிறது என்று பெர்சத்து பொதுச் செயலாளர் முகமது அஸ்மின் அலி கூறினார்.
உயர் நீதிமன்ற நீதிபதியின் முடிவை எதிர்த்து, சங்கங்கள் பதிவகம், உள்துறை அமைச்சர் சார்பாக மூத்த கூட்டரசு வழக்கறிஞர் அக்டோபர் 23 அன்று மேல்முறையீடு செய்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலே விளக்கியபடி, அதே நாளில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதை நன்கு அறிந்திருந்தும், பிஎன் உச்ச மன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக தக்கியூடின் ஏன் அக்டோபர் 23 தேதியிட்ட கடிதத்தை வெளியிட்டார் என்பதே எழும் கேள்வியாகும்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டின் சாராம்சம் உயர் நீதிமன்ற நீதிபதியின் முழுமையான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதே என்பதாலும், நீதிமன்ற நடவடிக்கைகளின் அனைத்து கட்டங்களும் முழுமையாக முடிவடையும் வரை, சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆர்ஓஎஸ் தீர்ப்பின் தற்போதைய நிலையையே பராமரிக்க வேண்டும் என்று பெர்சாட்டு கருதுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2026, 9:25 pm
ஜொகூரில் பள்ளிகள் நாளை முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்
October 25, 2026, 9:23 pm
நான் ஏமாற்றும் விளையாட்டு வீரர் அல்ல: லீ சோங் வெய்
October 25, 2026, 9:22 pm
வியட்நாமில் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் மலேசியப் பெண் விழுந்தார்
October 25, 2026, 9:20 pm
மித்ராவின் உயர்வு மடானி வணிக மானியத்திற்கு 8,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
October 25, 2026, 9:19 pm
மலாக்கா லிட்டில் இந்தியாவில் தீபாவளி களைகட்டுகிறது: டத்தோஶ்ரீ ரமணன் நேரில் பார்வையிட்டார்
October 25, 2026, 4:17 pm
இனம், மத விவகாரங்களில் அரசியலைக் கலக்காதீர்கள்: சிலாங்கூர் சுல்தான்
October 25, 2026, 4:13 pm
