நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் ஏமாற்றும் விளையாட்டு வீரர் அல்ல: லீ சோங் வெய்

கோலாலம்பூர்:

தனது ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகும், தனது நேர்மையைக் கேள்விக்குட்படுத்தும் சமூக ஊடக ஏளனங்கள் இன்னும் தன்னைப் புண்படுத்துவதாக டத்தோஸ்ரீ லீ சோங் வெய் ஒப்புக் கொண்டுள்ளார்.

முன்னாள் உலகிம் முதல் நிலை வீரரான அவர்,  பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஐடியா லைவ் அரீனாவில் நடைபெற்ற 'பியாண்ட் கிரேட்னஸ்' நேரலை கலந்துரையாடல் அமர்வின் போது, ​​

அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட நீடித்த மன உளைச்சலைப் பகிர்ந்துகொண்டார்.

தமக்கு ஏமாற்றும் எண்ணம் இல்லை என்று அனைத்துலக உலகக் கூட்டமைப்பின்  குழு தீர்ப்பளித்த போதிலும், தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி ஏமாற்றிய விளையாட்டு வீரர் என்று முத்திரை குத்தும் கருத்துக்களைத் தாம் இன்னும் எதிர்கொள்வதாக லீ சோங் வெய் கூறினார்.

வலிக்கிறதா என்று கேட்டால்? அந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset