செய்திகள் மலேசியா
மித்ராவின் உயர்வு மடானி வணிக மானியத்திற்கு 8,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
மலாக்கா:
மித்ரா முன்னெடுத்துள்ள உயர்வு மடானி வணிக மானியத் திட்டத்திற்கு 8,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
ஆரம்பத்தில் 700 பயனாளிகளை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த நிலையில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கு இந்தியத் தொழில்முனைவோர் மத்தியில், குறிப்பாக பி40, எம்40 வருமானப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இத்திட்டத்திற்காக மொத்தம் 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள தொழில்முனைவோர் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு உதவும் வகையில், 20,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் 700 பயனாளிகளைத் தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், தற்போது 8,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பண்டா ஹிலிர், லிட்டில் இந்தியா பகுதியில் இந்திய வணிகர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியத் தொழில்முனைவோர் தங்களது வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான உதவிகளின் தேவை அதிகரித்துள்ளதை விண்ணப்பங்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
மேலும், இந்திய சமூகத்தின் தேவைகளை நேரடியாக அறிந்து, நடைமுறையில் உள்ள உதவித் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய சந்திப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2026, 9:25 pm
ஜொகூரில் பள்ளிகள் நாளை முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்
October 25, 2026, 9:23 pm
தேசியக் கூட்டணியின் அவசரக் கூட்டத்தைக் கூட்டிய தக்கியூடினின் நடவடிக்கை கேள்விக்குறியானது: பெர்சத்து
October 25, 2026, 9:23 pm
நான் ஏமாற்றும் விளையாட்டு வீரர் அல்ல: லீ சோங் வெய்
October 25, 2026, 9:22 pm
வியட்நாமில் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் மலேசியப் பெண் விழுந்தார்
October 25, 2026, 9:19 pm
மலாக்கா லிட்டில் இந்தியாவில் தீபாவளி களைகட்டுகிறது: டத்தோஶ்ரீ ரமணன் நேரில் பார்வையிட்டார்
October 25, 2026, 4:17 pm
இனம், மத விவகாரங்களில் அரசியலைக் கலக்காதீர்கள்: சிலாங்கூர் சுல்தான்
October 25, 2026, 4:13 pm
