நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தல்: காடேக்கில் நடராஜா போட்டி

மலாக்கா:

மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் மஇகாவின் நடராஜா செல்லப்பா போட்டியிடுகிறார்.

16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறவுள்ளன.

வரும் 31ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறவிருப்பதால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் தேசிய முன்னணி வேட்பாளர்கள் அறிவிப்பு விழா இன்று மலாக்காவில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான தேசிய முன்னணி ஆதரவாளர்கள் திரண்டிருந்த இவ்விழாவிற்கு துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தலைமையேற்றார்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ அப்துல் ரவுஃப் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.

தேசிய முன்னணி போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அவர் அறிவித்தார்.

இதில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் நடராஜா செல்லப்பா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மலாக்கா மாநில மஇகா துணைத் தலைவரான நடராஜா செல்லப்பா, மாநிலத்தின் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இளைஞர் முதல் கட்சி, சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளின் அடிப்படையில் அவர் தற்போது காடேக் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset