நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா நீரிணையில் டேங்கர் கப்பலில் இருந்து 1.16 டன் கெட்டமைனை இந்தோனேசியா பறிமுதல் செய்தது

மேடான்:

மலாக்கா நீரிணையில் எம்டி குளோபல் 168 என்ற டேங்கர் கப்பல் மூலம் கடத்தப்பட்ட 1.16 டன் எச்சிஎல் கெட்டமைனை இந்தோனேசிய அதிகாரிகள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனேசிய போலிஸ் துறையின் குற்றப் புலனாய்வு முகமை, தேசிய போதைப்பொருள் முகமை, சுங்கத்துறை, இந்தோனேசிய விமானப்படை போலிஸ் ஆகியவற்றின் கூட்டுப் பணிக்குழு இதில் ஈடுபட்டது.

இந்தோனேசிய போலிஸ் தலைவர் ஜெனரல் சுயூடி அரியோ செட்டோ, நேற்று பெலவான் துறைமுகத்தில் உள்ள பண்டார் டெலி முனையத்தில் இந்த நடவடிக்கையின் வெற்றியை அறிவித்தார்.

இன்று நமது நாட்டின் இளம் தலைமுறையை அழிக்கும் உண்மையான தீய நோக்கங்களைக் கொண்ட கடத்தல் குற்றவாளிகளை நாங்கள் வெற்றிகரமாகக் கைது செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.

ஏழு இந்தோனேசியர்கள், ஒரு தைவானியர் உட்பட, கப்பலின் எட்டு பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.

பின்னர் அந்த எண்ணெய்க் கப்பல், வடக்கு சுமத்ராவின் மேடான் நகரில் உள்ள பெலவான் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

பெலவான் துறைமுகத்திற்கு வந்தடைந்ததும், முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, எம்டி குளோபல் 168 கப்பலின் அனைத்துப் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கப்பலின் பம்ப் அறையில் சேமிக்கப்பட்டிருந்த, மொத்தம் 1.16 டன் எடையுள்ள கெட்டமைன் எச்.சி.எல் அடங்கிய 58 பச்சை நிறச் சாக்குகளை கூட்டு கடல்சார் நடவடிக்கைப் பணிக்குழு வெற்றிகரமாகக் கண்டுபிடித்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset