நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்: தஞ்சோங் ரம்புத்தானில் சம்பவம்

தஞ்சோங் ரம்புத்தான்:
தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள கம்போங் ஓராங் அஸ்லி சுங்கை டோங்காங் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள், சிலாங்கூரைச் சேர்ந்த 42 வயதான வான் அஹ்மத் ரசானி வான் யஹாயா, 50 வயதான ரிஷி மஸ்தி ஜைடி என அடையாளம் காணப்பட்டனர்.

பேரா மாநில தீயணைப்பு.மீட்புத் துறையின் செயல்பாடுகள் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அஹ்மத் இதனை உறுதிப்படுத்தினார்.

பிற்பகல் 2.55 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தனது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

மீட்புப் பணிகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை வெளியே கொண்டுவர, தம்பூன் தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தை அடைய, பணியாளர்கள் சுமார் 600 மீட்டர் தூரம் வனப்பாதை வழியாகப் பயணிக்க வேண்டியிருந்தது.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​ஆற்றங்கரையில் இரண்டு ஆண்கள் மயக்க நிலையில் இருப்பதைக் அதிகாரிகள் கண்டனர்.

சம்பவ இடத்திலேயே மருத்துவப் பணியாளர்களால் பாதிக்கப்பட்ட இருவரும் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset