செய்திகள் மலேசியா
நூரிஸ்வானின் மரணம் குறித்து வெளிப்படையான, விரிவான விசாரணை நடத்த வேண்டும்: பிரதமர் ஐஜிபியை தொடர்பு கொண்டார்
புத்ராஜெயா:
இந்த மாத தொடக்கத்தில் காவலில் இருந்தபோது நூரிஸ்வான் சூல்கிப்லியின் மரணம் குறித்து மேலும் தகவல்களைப் பெறுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசிய போலிஸ் தலைவர் டத்தோஸ்ரீ காலித் இஸ்மாயிலை தொடர்பு கொண்டார்.
மேலும், இந்த விசாரணை விரிவாகவும், வெளிப்படையாகவும், சமரசமின்றியும் நடத்தப்பட வேண்டும்.
விசாரணையின் முன்னேற்றம் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
இன்று தன்னிடம் ஒரு மேல்முறையீட்டுக் கடிதத்தைச் சமர்ப்பிப்பதற்காக நூரிஸ்வானின் குடும்பத்தினர் வந்திருப்பதை தனது கட்சி கவனத்தில் கொண்டதாக அவர் கூறினார்.
மறைந்த நூரிஸ்வான் சூல்கிப்லியின் குடும்பத்தினர் இன்று என்னிடம் மேல்முறையீட்டுக் கடிதத்தை ஒப்படைக்க வந்திருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மேலும், காலமானவரின் மறைவால் நான் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். பதிலுக்காகக் காத்திருக்கும் அவரது குடும்பத்தினரின் துயரத்தையும் கவலையையும் நான் புரிந்துகொள்கிறேன்.
நான் இன்று மலாக்காவில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளேன்.
மேலும், கடிதத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், குடும்பத்தினர் எழுப்பிய விஷயங்களை நேரில் கேட்பதற்கும் எனது அதிகாரிகளை நியமித்துள்ளேன் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2026, 4:26 pm
மலாக்கா நீரிணையில் டேங்கர் கப்பலில் இருந்து 1.16 டன் கெட்டமைனை இந்தோனேசியா பறிமுதல் செய்தது
October 24, 2026, 1:40 pm
மலாக்கா முதல்வராக அப்துல் ரவூப் யூசோப் தொடர்வார் : அஹ்மத் ஸாஹித் நம்பிக்கை
October 24, 2026, 1:34 pm
யேமனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மலேசியா தயார்: முஹம்மத் ஹசான் தகவல்
October 24, 2026, 12:26 pm
நாட்டிலுள்ள 22 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
October 24, 2026, 12:19 pm
