நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்க தேசிய முன்னணி, பாஸ் மேடையைப் பகிர்ந்து கொள்ளும்: ஜாஹித்

மலாக்கா:

மலாக்கா மாநில தேர்தலுக்கான தத்தமது வேட்பாளர்களை அறிவிக்க, தேசிய முன்னணி, பாஸ் கட்சிகள் மேடையைப் பகிர்ந்து கொள்ளும்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.

மலாக்காவின் ஆயர் குரோவில், மலாக்கா தேர்தல் குறித்த தேசிய முன்னணி கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், இந்த நிகழ்வு வரும் சனிக்கிழமை நடைபெறும் என்று கூறினார்.

இதற்கிடையில், தேசிய முன்னணி 31 வேட்பாளர்களை அறிவிக்கும் என்ற டத்தோஸ்ரீ ஜாஹித் மீண்டும் வலியுறுத்தினார்.

அதே மேடையிலும் அதே அரங்கத்திலும், நாங்கள் 21 இடங்களையும், அவர்கள் ஏழு இடங்களையும் அறிவிப்பார்கள்.

பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய முன்னணி 21 இடங்களிலும், பாஸ், அதன் நட்புக் கட்சிகள் ஏழு இடங்களிலும் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset