செய்திகள் மலேசியா
நேப்பாளத்தில் காணாமல் போன 54 பேரை கண்டறியும் முயற்சிகளை மலேசியா தொடர்கிறது: முஹம்மது ஹசான்
கோலாலம்பூர்:
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தின் ரசுவாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, இன்னும் தொடர்புகொள்ள முடியாத 54 மலேசியர்களைக் கண்டறியும் முயற்சிகளை மலேசியா தொடர்கிறது.
அந்நாட்டு அரசாங்கத்தின் தேடுதல், மீட்பு நடவடிக்கை நிறுத்தப்பட்ட போதிலும் இந்த முயற்சிகள் தொடர்கின்றன.
காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், உள்ளூர் அதிகாரிகள், மலையேறுபவர்களின் பதிவு மையத்துடன் இன்னும் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் கூறினார்.
பயணப் பதிவுகள், அவர்களின் கைபேசிகளில் உள்ள கடைசி இருப்பிடத் தகவல்களை ஆய்வு செய்து, ஏதேனும் புதிய முன்னேற்றங்களைக் கண்டறிய இது உதவும்.
காத்மாண்டுவில் உள்ள எங்கள் தூதரகம், உள்ளூர் அரசாங்கங்கள், தொடர்பு மையங்கள், மற்றும் பொதுவாக மக்களைக் கண்காணிக்கும் (மலையேறும்) இடங்களைத் தொடர்புகொள்ள இன்னும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒரு கட்டத்தில், எங்களால் இங்கு தொடர்ந்து பணியாற்ற இடமில்லாத நிலை வரும் வரை, நாங்கள் அவர்களைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் மக்களவையில் நடைபெற்ற அமைச்சர்கள் கேள்வி நேர அமர்வின் போது கூறினார்.
பேரிடரைத் தொடர்ந்து இன்னும் தொடர்பு கொள்ளப்படாத மலேசியர்களின் தற்போதைய நிலை குறித்து லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமது சுஹைமி அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு முஹம்மது ஹசான் இவ்வாறு பதிலளித்தார்.
பேரழிவைத் தொடர்ந்து காணாமல் போனவர்களாக வகைப்படுத்தப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாத 5,285 நபர்களில், 54 மலேசியர்கள் உட்பட 34 நாடுகளைச் சேர்ந்த 636 பேர் வெளிநாட்டினர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 10:36 am
மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு சமூகத்தின் ஒற்றுமை அவசியம்: டத்தோ ப.சகாதேவன் கருத்து
October 23, 2026, 9:54 am
1 எம்டிபி சொத்துக்களை மீட்கும் முயற்சிகளைப் பொதுமன்னிப்பு பாதிக்காது: பிரதமர் அன்வார்
October 23, 2026, 9:51 am
மலாக்கா மாநில தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்க தேசிய முன்னணி, பாஸ் மேடையைப் பகிர்ந்து கொள்ளும்: ஜாஹித்
October 22, 2026, 10:16 pm
துன் மகாதீர் தன் மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு இன்று வந்தபோது ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்
October 22, 2026, 9:39 pm
