செய்திகள் மலேசியா
9.5 மில்லியன் ரிங்கிட் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே?; ரஃபிசி ஒரு பொய்யர்: டத்தோஸ்ரீ ரமணன் சாடல்
கோலாலம்பூர்:
பெர்சாமா தலைவர் ரஃபிசி ரம்லி மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பு, நிக் நஸ்மி தொடர்பான சர்ச்சை உட்பட மலேசிய பசுமை அறவாரியத்தின் நியமனம், நிதி நிர்வாகம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
மனிதவள அமைச்சரும் கெஅடிலான் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த சவால் விடுத்துள்ளார்.
தம்மீது சுமத்தப்பட்டுள்ள 9.5 மில்லியன் ரிங்கிட் நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே என்று கேள்வி எழுப்பிய ரமணன்,
ஆதாரங்கள் இருப்பதாகத் தொடர்ந்து கூறிவரும் ரஃபிசி, அவற்றை நிரூபிக்கும் ஆவணங்களை ஏன் வெளியிடவில்லை என்றும் வினவினார்.
மேலும் ரஃபிசி ஒரு தொடர் பொய்யர் என்று கடுமையாக விமர்சித்ததுடன், அவரது அரசியல் அணுகுமுறையையும் அவர் சாடினார்.
இந்த விவகாரம் குறித்து நான் பேசுவது இதுவே கடைசித் தடவை.
ரஃபிசி ஒரு தொடர் பொய்யர்! எத்தனை முறை அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு அவற்றை நீக்கியிருக்கிறார்? எத்தனை முறை பேசிவிட்டு பின்னர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்? என்று அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
தம்மீது முன்வைக்கப்பட்ட 9.5 மில்லியன் ரிங்கிட் நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்ட அவர், ஆறு அல்லது ஏழு மாதங்களாக ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவற்றை நிரூபிக்கும் ஓர் ஆவணம்கூட வெளியிடப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
ஆதாரம் இருக்கிறது, ஆதாரம் இருக்கிறது என்று தொடர்ந்து கூறுகிறார்கள்.
ஆனால், ஒரு காகித ஆதாரத்தையாவது காட்டியிருக்கிறார்களா? ஆதாரம் எங்கே? என்று அவர் சவால் விடுத்தார்.
பசுமை அறவாரிய விவகாரம்: நியமித்தது யார், நிதி நிர்வாகம் எப்படி?
இதற்கிடையில், நிக் நஸ்மியுடன் தொடர்புபடுத்தப்படும் மலேசிய பசுமை அறவாரியம் அமைப்பின் நிர்வாகம், அங்கு தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தொடர்பான விவகாரத்தையும் டத்தோஸ்ரீ ரமணன் எழுப்பினார்.
அந்த நியமனம் அப்போது இயற்கை வளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராக இருந்த நிக் நஸ்மியின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், நிறுவனங்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி, அதன் நிர்வாகம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
ரபிசி ரம்லியிடம் நான் கேட்க விரும்புவது இதுதான். இது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய செயலா? இது நிர்வாகத் தவறா? இது கடுமையான அலட்சியமா? இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்,”ல் என்று ரமணன் வலியுறுத்தினார்.
நிக் நஸ்மி விவகாரம்: கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலா?
நிக் நஸ்மி தொடர்பாக எழுந்துள்ளதாகக் கூறப்படும் தனிப்பட்ட சர்ச்சையையும் சுட்டிக்காட்டிய ரமணன், அந்த விவகாரத்திலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் ஃபர்ஹாஷ், பிரதமர், ஸெத்ரிக்ஸ் உள்ளிட்ட தரப்புகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உண்மையைச் சொல்லுங்கள். எதையும் மறைக்க வேண்டாம். உண்மையை நேரடியாக வெளிப்படுத்துங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 10:16 pm
துன் மகாதீர் தன் மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு இன்று வந்தபோது ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்
October 22, 2026, 9:39 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை: இஸ்மாயில் லசிம்
October 22, 2026, 3:10 pm
நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை நிலை நிறுத்த வேண்டும்: சிலாங்கூர் பாஸ் கட்சி
October 22, 2026, 2:23 pm
'TuJu' செயலி, இதுவரை 7,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது
October 22, 2026, 11:50 am
