நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீர் தன் மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு இன்று வந்தபோது ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது இன்று புத்ராஜயாவில் உள்ள மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹம்மது அலியின் அடக்கஸ்தலத்திற்கு வருகை தந்து பார்வையிட்டபோது அவரது தோற்றம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

புத்ராஜயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின், 'த்ரெட்ஸ்' செயலியில் பகிர்ந்த ஒரு பதிவின்படி, 

சக்கர நாற்காலியில் இருந்த துன் மகாதீர், பலருடன் மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹம்மது அலியின்  அடக்கஸ்தலத்திற்கு ஜியாராஹ் செய்ய வந்தார்.

அந்தப் பதிவில், முன்னாள் பிரதமர் தனது அன்பு மனைவியின் அடக்கஸ்தலத்திற்கு பார்வையிட வந்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஹஸ்மாவின் கல்லறையைப் பார்வையிட வந்த அனைவருக்கும் நன்றி என்று அவர் எளிமையாகக் கூறினார்.

முன்னாள் பிரதமரின் தோற்றத்தைக் கண்டு சமூக ஊடகப் பயனர்கள் நிம்மதியடைந்ததால், இந்தப் பகிர்வு பெரும் கவனத்தை ஈர்த்தது. 

அவர் மிகவும் நேர்த்தியாகவும் பொலிவுடனும் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது.

துன் மிகவும் ஆரோக்கியமாக  தெரிகிறார். அவருக்கு வலிமையும் நல்ல ஆரோக்கியமும் இறைவன் வழங்கட்டும்.

மேலும் அவர் எப்போதும் இறைவனின் அருள் பெற்று ஆரோக்கியத்துடன் இருக்கட்டும் என்று ஒரு பயனர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset