நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 22-வது ஆண்டு பொதுக் கூட்டம் 11 நவம்பர் 2026 இல் நடைபெறும்: செயலாளர் ஹபீப் அறிவிப்பு

கோலாலம்பூர்:

மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 22-வது ஆண்டு பொதுக் கூட்டம் (PRESMA - AGM) 11 நவம்பர் 2026 (புதன்கிழமை)  காலை 11.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹபீப் ரஹ்மான் பின் ஷாஹுல் ஹமீத் கூறினார்.

22-வது ஆண்டு பொதுக் கூட்டம் கோலாலம்பூர் Matrade Exhibition Convention Centre இல் நடைபெறும்.

உறுப்பினர்கள் அனைவரும் இந்த 22-வது PRESMA ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள் என்று 
ஹபிபுர் ரஹ்மான் பின் ஷாகுல் ஹமீது
தெரிவித்தார்.

22-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.

உறுப்பினர்கள் தங்கள் வருடாந்திர சந்தாவையும் நிலுவையில் உள்ள கட்டணங்களையும், பொதுக் கூட்டத்திற்கு முன்பாகவே PRESMA அலுவலகத்தில் செலுத்திவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
கூட்டத்தின் போது நெரிசலைத் தவிர்க்க, கட்டணங்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது ரொக்கம் மூலமாக செலுத்தலாம்.

பதிவு செய்யும் இடம் (Registration Counter) காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.

பூர்த்தி செய்யப்பட்ட முன்மொழிவுப் படிவங்களை 30 அக்டோபர் 2026-க்கு முன்பாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

22-வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது புதிய பதிவுகளோ அல்லது கிளைகளைச் சேர்த்தலோ அவை அனுமதிக்கப்படாது 

ஒன்றுக்கு மேற்பட்ட உணவகங்களைக் கொண்ட உறுப்பினர்கள் தங்களின் அடையாள
அட்டையைக் கொண் டுவருவதடன், பிரதிநிதியாக ஒருவரை அழைத்து வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset