செய்திகள் மலேசியா
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை ஏற்பாடுகளால் வர்த்தகர்கள் பாதிப்பு; 1.5 மில்லியன் ரிங்கிட் செலவிடுவதில் என்ன பயன்?: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை ஏற்பாடுகள் குறித்து வர்த்தகர்களின் குறைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சு, கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பிரிக்பீல்ட்ஸில் தீபாவளி சந்தை நடைபெற்று வருகிறது.
இச்சந்தை ஏற்பாடுகளில் வர்த்தகர்கள் அதிருப்தியுடனும் அசௌகரியத்துடனும் இருக்கும் நிலையில், அதற்காக 1.5 மில்லியன் ரிங்கிட் செலவிடுவதில் எந்தப் பயனும் இல்லை.
எனது கருத்துகளுக்கு நீங்கள் செவிசாய்க்காமல் இருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால், குறைந்தபட்சம் வர்த்தகர்களின் குறைகளையும் கவலைகளையும் கேட்டறியுங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், பொது மக்களின் நலனுக்காகவே பொது நிதி செலவிடப்பட வேண்டும் என்றும், வர்த்தகர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் ஏற்பாடுகளுக்காக அல்ல.
எதிர்காலத்தில் மேலும் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த ஏற்பாடுகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் சமூக ஊடக பதிவில் கூறியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 3:10 pm
நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை நிலை நிறுத்த வேண்டும்: சிலாங்கூர் பாஸ் கட்சி
October 22, 2026, 2:23 pm
'TuJu' செயலி, இதுவரை 7,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது
October 22, 2026, 11:50 am
மலேசியாவில் 15 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீடு: நீலாயில் அதிகபட்சமாக 163 பதிவு
October 22, 2026, 11:26 am
மாணவன் ஆசிரியையைத் தாக்கினான்: காரணம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது
October 22, 2026, 11:25 am
பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் TuJu-வில் இடையூறு ஏற்பட்டது
October 22, 2026, 11:24 am
