செய்திகள் மலேசியா
நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை நிலை நிறுத்த வேண்டும்: சிலாங்கூர் பாஸ் கட்சி
கோலாலம்பூர்:
நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் .
பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோ டாக்டர் அப்துல் ஹலிம் தமுரி இதனை கூறினார்.
நாட்டில் உள்ள இந்திய சமுதாயம் தீபாவளி பெருநாளை கொண்டாட தயாராகி வருகிறது.
இந்நிலையில் DEEPAVALI, DIWALI என்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறிப்பாக தீபாவளி சந்தைகள், பதாகைகள், வாழ்த்துகள் ஆகியவற்றில் தீபாவளி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் டேவான் பஹாசா கூட தீபாவளியை தான் அங்கீகரித்துள்ளது என எனக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆக நாட்டில் தீபாவளி என்ற வார்த்தையின் பயன்பாட்டை
நிலை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இதனிடையே பாஸ் கட்சியின் அனைத்து வாழ்த்துகளிலும் தீபாவளி என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளி என்பதில் பாஸ் உறுதியாக உள்ளது.
இதே போன்று தமிழ் சமுதாயத்தின் உனர்வுகளுக்கு மற்ற கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி ஆதரவு பேரவையின் தலைவர் ஜனராமன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 2:23 pm
'TuJu' செயலி, இதுவரை 7,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது
October 22, 2026, 11:50 am
மலேசியாவில் 15 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீடு: நீலாயில் அதிகபட்சமாக 163 பதிவு
October 22, 2026, 11:26 am
மாணவன் ஆசிரியையைத் தாக்கினான்: காரணம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது
October 22, 2026, 11:25 am
பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் TuJu-வில் இடையூறு ஏற்பட்டது
October 22, 2026, 11:24 am
