செய்திகள் மலேசியா
புதிய தேசியக் கூட்டணி அமைக்கும் திட்டத்தைக் கேள்வி கேட்க வேண்டாம்: பாஸ் கட்சிக்கு சஞ்ஜீவன் அறிவுறுத்தல்
கோலாலம்பூர்:
சங்கங்களின் பதிவிலாகாவால் எதிர்க்கட்சிக் கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, புதிய தேசியக் கூட்டணி அமைக்கும் திட்டத்தைக் கேள்வி கேட்க வேண்டாம்.
தங்கள் கட்சியின் ஆட்சியின் கீழ் தேசியக் கூட்டணி ஏன் ரத்து செய்யப்பட்டது என்பதை பாஸ் கட்சி சிந்தித்து விளக்க வேண்டும் என பெர்சத்து சயாப் பிரிவின் துணை தலைவர் டத்தோஶ்ரீ ஸ்ரீ சஞ்ஜீவன் கூறினார்.
புதிய தேசியக் கூட்டணி இன்னும் பிறக்கவில்லை. ஆனால் அதன் தந்தை யார் என்பது குறித்து நாங்கள் ஏற்கனவே கவலைப்படுகிறோம். பழைய தேசியக் கூட்டணியின் பதிவு நீக்கப்பட்டுவிட்டது, அதற்கு யார் பொறுப்பு.
புதியக் கூட்டணியின் பிறப்புச் சான்றிதழ்கள் குறித்து கருத்து தெரிவிப்பதில் மும்முரமாக ஈடுபடுவதற்கு முன்பு, முதலில் தேசியக் கூட்டணியின் பதிவு ரத்து செய்யப்பட்டதற்கான இறப்புச் சான்றிதழ்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
புதிய தேசியக் கூட்டணியை உருவாக்க விரும்பும் கட்சிக்கு சங்கங்களின் பதிவிலாகாவுடன் நல்ல உறவு உள்ளது.
ஏனெனில் அது நிறைவேறுமா இல்லையா என்பதை அந்தத் துறைதான் முடிவு செய்யும் என்று கூறிய பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசனின் அறிக்கை குறித்து சஞ்ஜீவன் கருத்துத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 11:50 am
மலேசியாவில் 15 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீடு: நீலாயில் அதிகபட்சமாக 163 பதிவு
October 22, 2026, 11:26 am
மாணவன் ஆசிரியையைத் தாக்கினான்: காரணம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது
October 22, 2026, 11:25 am
பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் TuJu-வில் இடையூறு ஏற்பட்டது
October 22, 2026, 11:23 am
1,660 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 13,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன: சூல்கிப்லி அஹ்மத்
October 22, 2026, 8:48 am
புகை மூட்டம்; மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல: சைட் சாடிக்
October 22, 2026, 8:40 am
