நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் 15 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீடு: நீலாயில் அதிகபட்சமாக 163 பதிவு

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் மொத்தம் 15 பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

இதில் நெகிரி செம்பிலான், நிலாய் பகுதியில் இன்று காலை 9 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 163 புள்ளிகள் பதிவாகியுள்ளன.

சுற்றுச்சூழல் துறையின் (JAS) மலேசிய காற்றுத் தரக் குறியீட்டு மேலாண்மை மையப் (APIMS) தரவுகளின்படி, மலாக்காவிலுள்ள புக்கிட் ரம்பாய் பகுதி 159 புள்ளிகளுடன் இரண்டாவது அதிகபட்ச அளவைப் பதிவு செய்துள்ளது.

இதனிடையே கிள்ளான், சிரம்பான் மற்றும் ஜொஹான் செத்தியா ஆகிய பகுதிகள் முறையே 155 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளன.

அதனைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா (154), தாங்காக் (153), பத்து மூடா மற்றும் ஷா ஆலம் (152) ஆகிய இடங்களிலும் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.

மேலும், போர்ட் டிக்சன் (148), மலாக்கா மாநகரம் (142), செராஸ் மற்றும் புத்ராஜெயா (140), பந்திங் (131) மற்றும் பாசிர் கூடாங் (108) ஆகிய பகுதிகளிலும் காற்று மாசடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், நாட்டின் 50 இடங்களில் காற்றுத் தரம் மிதமான நிலையிலும், வெறும் 3 இடங்களில் மட்டுமே நல்ல நிலையிலும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset