நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பறிமுதல் செய்யப்பட்ட 2.6 மில்லியன் ரிங்கிட் இணையவழி மோசடிப் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது: சைபுடின்

கோலாலம்பூர்:

தேசிய மோசடி பதிலளிப்பு மையம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இணையவழி மோசடி வழக்குகளில் ஏற்பட்ட இழப்புகள் 125.29 மில்லியன் ரிங்கிட் எனப் பதிவு செய்துள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை கூறினார்.

மூன்று வகையான குற்றச்செயல் முறைகளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளது.

அவை, மின்னணு வழி கொள்முதல் (2,405 வழக்குகள்), அதனைத் தொடர்ந்து தொலைத்தொடர்புக் குற்றங்கள் (1,026 வழக்குகள்), இல்லாத கடன்கள் (894 வழக்குகள்) ஆகும்.

குற்றவாளிகளின் மாறிவரும்,  மேலும் மேலும் நுட்பமான தந்திரங்களே இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு முக்கியக் காரணம்.

இதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களை நம்பவைக்கப் போலி அடையாளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

குற்றவாளிகள், சமூக ஊடகங்கள், தகவல் தொடர்பு செயலிகள், இலக்கவியல் தளங்களின் வெளிப்படைத்தன்மையைப் பயன்படுத்தி, சட்டப்பூர்வமானதாகவும் நம்பத்தகுந்ததாகவும் தோன்றும் பல்வேறு சலுகைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் எளிதாகவும் விரைவாகவும் அணுகுகிறார்கள்.

அதே நேரத்தில், குறுகிய காலத்தில் பெரும் இலாபங்கள் அல்லது வருமானத்தைப் பெறுவதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை, உணர்ச்சிகள், அலட்சியம் மற்றும் ஆசையைக் கையாளுவதன் மூலம், 'சமூகப் பொறியியல்' நுட்பங்கள் வழியாக மனிதக் காரணங்களாலும் சுரண்டப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து செயல்படும் கும்பல்கள், பல்வேறு அதிகார வரம்புகளில் உள்ள அடையாளங்கள், கணக்குகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இந்தக் குற்றத்தின் எல்லை கடந்த தன்மையும், இக்குற்றத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது என்று அவர் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset