செய்திகள் மலேசியா
போதைப்பொருள் வழக்குகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 72 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டனர்
கோலாலம்பூர்:
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மொத்தம் 72 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஜனவரி முதல் அக்டோபர் 15 வரையிலான காலகட்டத்தில், 81.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுமார் 1,704 கிலோகிராம் போதைப்பொருட்கள் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டன.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.
இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் 57 ஆண்கள், 15 பெண்கள் அடங்குவதாக கூறினார்.
தாய்லாந்தில் அதிகபட்சமாக 19 பேரும், அதைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் 16 பேரும், தைவான், சிங்கப்பூரில் தலா எட்டு பேரும், ஜப்பானில் ஐந்து பேரும், பிலிப்பைன்ஸில் நான்கு பேரும், இந்தியா, ஹாங்காங்கில் தலா மூன்று பேரும், மக்காவ்வில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அதே நேரத்தில் தென் கொரியா, நைஜீரியா, மாலத்தீவுகள் மற்றும் இலங்கையில் தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
வேலை வாய்ப்புகள், கவர்ச்சிகரமான ஊதியம், பயண நிதியுதவி மற்றும் மூன்றாம் தரப்பினருக்காகப் பொருட்களை அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு முறைகள் மூலம், சர்வதேச போதைப்பொருள் கும்பல்கள் மலேசியர்களைப் போதைப்பொருட்களைக் கடத்துபவர்களாக அல்லது அனுப்புபவர்களாகப் பயன்படுத்தும் சாத்தியத்தை குற்றப் புலனாய்வுத் துறை தீவிரமாகக் கருதுகிறது.
இத்தகைய தந்திரங்கள், அபாயங்கள் மற்றும் சட்டரீதியான விளைவுகள் குறித்து அதிகம் அறியாத தனிநபர்களை ஏமாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
இதன் மூலம், சம்பந்தப்பட்ட நாட்டில் அவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 11:50 am
மலேசியாவில் 15 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீடு: நீலாயில் அதிகபட்சமாக 163 பதிவு
October 22, 2026, 11:26 am
மாணவன் ஆசிரியையைத் தாக்கினான்: காரணம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது
October 22, 2026, 11:25 am
பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் TuJu-வில் இடையூறு ஏற்பட்டது
October 22, 2026, 11:24 am
புதிய தேசியக் கூட்டணி அமைக்கும் திட்டத்தைக் கேள்வி கேட்க வேண்டாம்: பாஸ் கட்சிக்கு சஞ்ஜீவன் அறிவுறுத்தல்
October 22, 2026, 11:23 am
1,660 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 13,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன: சூல்கிப்லி அஹ்மத்
October 22, 2026, 8:48 am
புகை மூட்டம்; மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல: சைட் சாடிக்
October 22, 2026, 8:40 am
