செய்திகள் மலேசியா
பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால் TuJu-வில் இடையூறு ஏற்பட்டது
புத்ராஜெயா:
பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் வழிசெலுத்தல் செயலியான TuJu-வில் தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த மலேசிய நெடுஞ்சாலை ஆணையம், தாங்களும் செயலியை வழங்கும் நிறுவனமான Prosignal Consortium Sdn Bhd (PCSB)-யும், இந்த இடையூறுக்கான காரணத்தைக் கண்டறியவும், நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும், மேலும் பயனர்களின் அதிகரிப்பைச் சமாளிக்கும் வகையில் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளது.
வழிசெலுத்தல் செயல்பாடுகள், வழித்தடத் தகவல்களின் துல்லியம் மற்றும் பயனர் அனுபவம் தொடர்பான பயனர் கருத்துக்களுக்கும் மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்துகிறது.
TuJu மேலும் நிலையான, துல்லியமான மற்றும் பயனருக்கு உகந்த சேவைகளை வழங்குவதை உறுதிசெய்ய, மேம்பாடுகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
TuJu கடந்த 2025 நவம்பர் 26ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது PCS, மலேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இணைந்து உருவாக்கிய ஒரு நெடுஞ்சாலை வழிசெலுத்தல் செயலியாகும்.
இஸ்ரேலால் அரசாங்கத் தகவல்களும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளும் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, நேற்று அரசு ஊழியர்கள் Waze வழிசெலுத்தல் செயலியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து முக்கியமான அரசாங்கத் தகவல்களையும் மக்களின் தனிப்பட்ட தரவுகளையும் பாதுகாப்பதற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த முடிவை எடுத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 11:50 am
மலேசியாவில் 15 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீடு: நீலாயில் அதிகபட்சமாக 163 பதிவு
October 22, 2026, 11:26 am
மாணவன் ஆசிரியையைத் தாக்கினான்: காரணம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது
October 22, 2026, 11:24 am
புதிய தேசியக் கூட்டணி அமைக்கும் திட்டத்தைக் கேள்வி கேட்க வேண்டாம்: பாஸ் கட்சிக்கு சஞ்ஜீவன் அறிவுறுத்தல்
October 22, 2026, 11:23 am
1,660 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 13,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன: சூல்கிப்லி அஹ்மத்
October 22, 2026, 8:48 am
புகை மூட்டம்; மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல: சைட் சாடிக்
October 22, 2026, 8:40 am
