நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகை மூட்டம்; மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல: சைட் சாடிக்

கோலாலம்பூர்:

புகை மூட்டம் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல. எங்கள் கொடிகள் வேறுபட்டவை.

ஆனால் மூச்சுத்திணறலைப் பொறுத்தவரை, துன்பம் ஒன்றுதான் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் கூறினார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சனையைத் தொடர்ந்து, ஆசியான் அமைப்பு இந்தோனேசியாவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தனது அழைப்பு குறித்து, முன்னாள் இந்தோனேசிய வர்த்தக அமைச்சர் முஹம்மது லுத்ஃபி விடுத்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் விதமாக சைட் சாடிக் இவ்வாறு கூறினார்.

இந்தப் பிரச்சினையை இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு தகராறாகப் பார்க்கக்கூடாது.

மாறாக, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எந்தவொரு தரப்புக்கும் எதிராக ஆதார அடிப்படையிலான நடவடிக்கை மூலம் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

இலாபத்திற்காகக் காடுகளை எரிப்பதாக நிரூபிக்கப்பட்ட மலேசியா, இந்தோனேசியா அல்லது சிங்கப்பூரைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் இந்தோனேசிய சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட தரப்பு என் சொந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும், நான் மாசுபடுத்துபவர்களின் பாதுகாவலனாக இருக்க மாட்டேன். 

மலேசிய, இந்தோனேசிய அல்லது சிங்கப்பூர் என கொடியைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.

ஒரு நிறுவனம் இலாபத்திற்காகக் காடுகளை எரிப்பது நிரூபிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொறுப்பான தரப்பினர் இந்தோனேசியாவில் செயல்படுகிறார்கள். மேலும் இந்தோனேசிய சட்டத்திற்கு உட்பட்டவர்கள். 

நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உங்கள் இந்தோனேசிய அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. 

அவர்களை பாதுகாக்க வேண்டாம் என்று சைட் சாடிக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset